பீகாரில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 36 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள முஸாஃபர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக 48 மணிநேரத்தில் 36 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 133 குழந்தைகள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடுமையான கோடை வெப்பத்தின் தாக்கத்தால் ஹைபோக்ளேசெமியா (hypoglycemia)என்ற ஒருவகை மூளைக்காய்ச்சல் அதிகளவில் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி, வலிப்பு மற்றும் கோமாவை உண்டாக்குவதாகவும், 15 வயதுகுட்டபட்டவர்கள் அதிகமாக இந்த நோயால் பதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் கிராமபுறங்களில் இருந்தே அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு போதிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுதாததே காரணம் என அம்மாநில முதலைமைச்சர் கூறியுள்ளார். மேலும் இது குறித்து ஆய்வு நடத்த அம்மாநில சுகாதரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சாப்பிடாமல் தூங்கினால் ரத்தத்தில் ஹைபோக்ளேசெமியா பரவ வாய்ப்பு உள்ளதால், குழந்தைகளை இரவில் சாப்பிடாமல் தூங்க வைக்க கூடாது என பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறித்துயுள்ளனர்.