'ரொம்ப சாரி 'கோலி' ...'மொத்த நம்பிக்கை'யும் போய்டும்... 'இத மட்டும் எங்களால பண்ண முடியாது'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஎல்.இ.டி.பெய்ல்ஸ் தொடர்பாக விராட் கோலி மற்றும் ஆரோன் பின்ச் வைத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
எல்.இ.டி.பெய்ல்ஸ் முறையானது கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.இது நடுவர்களின் வேலையை எளிதாக்குகிறது.எனவே நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் இந்த முறையானது பயன்படுத்தபட்டு வருகிறது.இதனிடையே பந்து ஸ்டம்பை தாக்கியும் பெய்ல்ஸ் கீழே விழாமல் இருப்பது,கடும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
இந்திய,ஆஸ்திரேலிய அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில்,பும்ரா வீசிய ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.அப்போது அவர் வீசிய பந்து ஸ்டெம்பை தாக்கியது.ஆனால் பெய்ல்ஸ் விழாததால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார்.இது இந்திய வீரர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.அதோடு நடப்பு உலகக்கோப்பை போட்டியில்,10 முறை பந்து ஸ்டெம்பை தாக்கியும் பெய்ல்ஸ் விழவில்லை.இது பௌலர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
எனவே இந்த முறையினை மாற்ற வேண்டும் என இந்திய கேப்டன் விராத் கோலி, மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் ஐசிசியிடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் அவர்கள் இருவரின் கோரிக்கையையும் ஐசிசி நிராகரித்துவிட்டது.அதற்கு விளக்கமளித்துள்ள ஐசிசி '' தற்போது உலகக்கோப்பை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.இந்த சூழ்நிலையில் எல்.இ.டி.பெய்ல்ஸில் மாற்றம் செய்தால் போட்டியின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாகிவிடும்.எனவே இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என ஐசிசி தெரிவித்துள்ளது.