'நிஜமான தேவதை சார் இந்த பொண்ணு'...'அப்பா உயிரை' காப்பாற்ற இளம் பெண் எடுத்த ரிஸ்க்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அப்பாக்களுக்கு மகள்கள் மீது எப்போதுமே தனி பாசம் உண்டு.ஆண் பிள்ளைகள் இருந்தாலும்,மகள்கள் மீது அப்பாக்கள் செலுத்தும் பாசம் எப்போதுமே ஒரு படி மேலே தான் இருக்கும்.அதே போன்று தான் மகள்களும். தனக்கு வர போகும் கணவன்மார்கள் தன்னுடைய அப்பாவை போல தான் இருக்க வேண்டும் என கூறுவதிலேயே,தன்னுடைய அப்பாக்கள் மீது அவர்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ளலாம்.

'நிஜமான தேவதை சார் இந்த பொண்ணு'...'அப்பா உயிரை' காப்பாற்ற இளம் பெண் எடுத்த ரிஸ்க்!

அந்த அளவு கடந்த பாசத்தினால்,தன் தந்தையின் உயிரைக் காப்பாற்ற 19 வயது இளம்பெண் செய்த செயல் பலரையும் நெகிழவைத்துள்ளது.கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ராகி தத்தா.இவருடைய தந்தை கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் தவித்து வந்தார்.இதனால் அவரை கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தார்கள்.அப்போது தான்  கல்லீரலில் பிரச்சனை இருந்தது தெரிய வந்தது.தந்தை மறுவாழ்வு பெற வேண்டும் என்றால், அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். ஒருவருடத்துக்குள் அறுவைசிகிச்சை செய்யவில்லை என்றால், உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு பேரதிர்ச்சியாக கொல்கத்தாவில் அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள் இல்லை என தெரிவித்து விட்டார்கள்.இருப்பினும் மனம் தளராமல் தனது தந்தையை அழைத்துக்கொண்டு ஹைதராபாத் மருத்துவமனைக்குப் புறப்பட்டனர்.அங்கு அட்மிட் செய்யப்பட்டவருக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது.ஆனால் கல்லீரல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நேரத்தில், அந்த தைரியமான முடிவை எடுத்தார் ராகி. தந்தைக்காகத் தனது 60 சதவிகித கல்லீரலைத் தானம் கொடுக்க முன்வந்தார். வெற்றிகரமாக சிகிச்சை முடிந்தது. தற்போது அவர் தந்தையும், ராகியும் நன்றாக இருக்கிறார்கள்.

தனது தந்தைக்காக  ராகி எடுத்த முடிவு மருத்துவர்களை ஆச்சரியப்பட வைத்தது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்''தந்தைக்காக நான் கல்லீரல் கொடுக்கிறேன் என்று ராகி சொன்னதும் எங்களால் பேச முடியவில்லை.அவளிடம் எந்த பயமும் இல்லை.ராகியின் தைரியத்தை கண்டு நாங்கள் வியக்கிறோம்.தனது தந்தையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் அவளிடம் இருந்தது.நிச்சயம் அவள் தேவதை தான் என மருத்துவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

ராகி தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பலரும் அவரை ரியல் ஹீரோ, தந்தையின் இளவரசி' எனப் புகழ்ந்துவருகின்றனர். ஆனால் இவை அனைத்தையும் பெரிது படுத்தாமல் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என் குடும்பம் தான் இந்த வாழ்க்கையை கொடுத்தது,நம் குடும்பத்தை முதலில் நேசிப்போம் என சிம்பிளாக ஒரு பதிவை போட்டுள்ளார்.

பெண் குழந்தைகளால் எதற்கும் பயனில்லை என கூறுபவர்களுக்கு 'எதற்கும் அஞ்சாத தேவதையான ராகி' தான் சிறந்த பதில்.

19-YEAR OLD DAUGHTER, LIVER, FATHER’S LIFE, RAKHI DUTTA