‘பவுண்ட்ரி போகும்னு பேட்ட திருப்புனா இப்டி ஆகிருச்சே’.. வைரலாகும் தவான் விக்கெட் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய போட்டி டெல்லியில் உள்ள ஃப்ந்ரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா(30) மற்றும் டி காக்(35) நிதனாமான தொடக்கத்தை கொடுத்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணல் பாண்ட்யா கூட்டணி அதிரடிகாட்டியது. இதில் ஹர்திக் 15 பந்துகளில் 32 ரன்களும், க்ருணல் 26 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதில் ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்திருந்த போது ராகுல் சஹர் வீசிய பந்தில் எதிர்பாராதவிதமாக அவுட்டானார்.
Ball crawls to stumps, Dhawan bowled
— IndianPremierLeague (@IPL) April 18, 2019
Full video here ▶️▶️https://t.co/CLrP1kAuZt #DCvMI