கோயிலுக்குமுன் தனியாக அழுதுகொண்டிருந்த ‘சிறுமி’.. ‘ஆட்டோவில் கடத்தி 6 மாதமாக..!’.. வெளியான பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆட்டோவில் கடத்தி 16 வயது சிறுமியை 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றின் முன்னால் 16 வயது சிறுமி தனியாக அழுதுகொண்டே இருந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் சிறுமியிடம் எதற்கு அழுகிறாய்? என கேட்டுள்ளனர். ஆனால் சிறுமி ஏதும் பேசாமல் அழுதுகொண்டே இருக்கவே, உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் சிறுமிக்கு தைரியம் கொடுத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது 10 பேர் கொண்ட கும்பல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தெரியவந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை ஆட்டோவில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் இன்னும் சில நண்பர்களை வரவழைத்து தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு இடங்களில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற நபர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதும், தந்தையை இழந்த அவர் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருவதும் போலீசார் நடத்திய விசாரணை தெரியவந்துள்ளது.