'300 கிலோ மீட்டர் வேகம்'... 'சென்னையில் இருந்து 3 மணி நேரம் தான்'... வரப்போகும் அதிவேக ரயில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை-மைசூருக்கு இடையே அதிவேக ரெயில் இயக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான ஆய்வுப்பணி மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.
நேஷனல் ஹை ஸ்பீடு ரெயில் கார்பரேசன் மூலம், சென்னை-பெங்களூர்- மைசூர் இடையே அதிவேக ரெயில் இயக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 435 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த வழித்தடத்தில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலினை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப்பணி மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான இடம், தொழில்நுட்பம், பாதை வழிவமைப்பு, செலவினம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான பணி தொடங்கி உள்ளது.
இதனிடையே அதிவேக ரெயில் சேவை மூலம் 50 சதவீதம் பயண நேரம் குறையும். சென்னையிலிருந்து பெங்களூருக்கு 6 மணி நேரம் என்றால் 3 மணி நேரத்தில் செல்ல முடியும். சதாப்தி எக்ஸ்பிரஸ் 7 மணி நேரத்தில் மைசூர் சென்றடைகிறது. அதிவேக ரெயில் மூலம் 3½ மணி நேரத்தில் மைசூர் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.