Video: காட்டுக்குள்ள வச்சு... ஹேப்பி 'பர்த்டே' கொண்டாடுன தம்பி... கடைசில 'என்ன' ஆச்சுன்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

சமீபகாலமாக பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடுவது தான் ட்ரெண்ட். குறிப்பாக கத்தியால் கேக் வெட்டுவது, நடுரோட்டில் வைத்து கேக் வெட்டுவது, வாளால் கேக் வெட்டுவது என பலரும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

Video: காட்டுக்குள்ள வச்சு... ஹேப்பி 'பர்த்டே' கொண்டாடுன தம்பி... கடைசில 'என்ன' ஆச்சுன்னு பாருங்க!

அந்தவகையில் இளைஞர் ஒருவர் காட்டுக்குள் வைத்து கேக் வெட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இளைஞர் ஒருவர் நண்பர்கள் ஹேப்பி பர்த்டே சாங் பாட உற்சாகமாக கேக் வெட்டுகிறார்.

வெட்டி முடித்து கேக்கை எடுத்து ஊட்டிவிட முயலும்போது, எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று கேக்கை மொத்தமாக தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது. இதுவரை இந்த வீடியோவை சுமார் 23 ஆயிரத்திற்கும் மேல் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.