IPL ஏலத்துல... சென்னை டீமோட 'மெயின்' டார்கெட்... இவங்க 3 பேரும் தானாம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வருகின்ற 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதே நேரம் ஜோ ரூட், மிட்செல் ஸ்டார்க், சாம் பில்லிங்ஸ் போன்ற பிரபல வீரர்கள் பலரும் ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகியுள்ளனர்.
இந்தநிலையில் ரசிகர்களின் மனங்கவர்ந்த சென்னை அணியின் ஆக்ஷன் பிளான் என்னவாக இருக்கும்? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மொத்தமிருக்கும் 5 இடங்களில் 2 வெளிநாட்டு வீரர்களையும், 3 உள்நாட்டு வீரர்களையும் சென்னை அணியால் எடுக்க முடியும். அந்த வகையில் சுழற்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரன், தீபக் ஹூடா, பாட் கம்மின்ஸ் ஆகிய மூவரையும் சென்னை அணி குறிவைக்கலாம் என்று கூறப்படுகிறது.