'மொத்தமாக' 2400 பேரை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்?... அதிரடி ஆட்குறைப்பால் கலங்கும் ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

சேவை நிறுவனங்களில் ஒன்றான ஓயோ விரைவில் இந்திய கிளையில் இருந்து 2400 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

'மொத்தமாக' 2400 பேரை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்?... அதிரடி ஆட்குறைப்பால் கலங்கும் ஊழியர்கள்!

அதாவது 2400 ஊழியர்கள் அல்லது மொத்த ஊழியர்களில் 20% பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாம். வேகமாக ஏற்றம் கண்ட இந்நிறுவனம் சமீபகாலமாக அடைந்து வரும் நஷ்டத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ரித்தேஷ் அகர்வால்,'' இது எளிதான முடிவல்ல. நாங்கள் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்வதால் வேறு வழியின்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நிறுவனத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி,'' என மெயில் அனுப்பி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த பணிநீக்க நடவடிக்கை இதோடு மட்டுமின்றி அடுத்து வரும் மார்ச் மாதத்திலும் தொடரும் என கூறப்படுகிறது. செலவுகளை குறைக்கும் சிக்கன நடவடிக்கையாக இந்த பணிநீக்கம் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.