புவனேஸ்வர் குமாரின் 'தற்போதைய' நிலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக 'உண்மையை' அறிவித்த பிசிசிஐ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின்போது வயிற்றுவலி காரணமாக, பாதியில் விலகினார். இதையடுத்து அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் குடலிறக்க பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் புவனேஸ்வரின் தற்போதையை நிலை குறித்து பிசிசிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 9-ம் தேதி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்ற புவனேஸ்வர், 11-ம் தேதி அறுவைசிகிச்சை செய்து கொண்டார்.
அறுவை சிகிச்சையின்போது இந்திய அணியின் பிஸியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மர் புவனேசுக்கு உதவி செய்தார். புவனேஸ்வர் இந்தியா திரும்பி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய பயிற்சிகளை மீண்டும் தொடருவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.