அடேங்கப்பா! அந்த விஷயத்துல அமெரிக்காவை முறியடித்த இந்தியா.. ஷாக்கிங் சர்வே!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

யூ டியூப் வலைத்தளம் இந்தியாவில் அசுர வளர்ச்சி அடைந்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சூசன் தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா! அந்த விஷயத்துல அமெரிக்காவை முறியடித்த இந்தியா.. ஷாக்கிங் சர்வே!

சமூக வலைத்தளங்களில் பிரதானமான ஒன்று யூ டியூப். தற்போது ஸ்மார்ட் போன் அதிகரித்திருப்பதால் தொலைக்காட்சியில் பார்ப்பதைவிட மொபைல்போனில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது அதிகரித்து வருகின்றது.  மேலும், இந்தத் தளம் வீடியோ பதிவுகள் பார்க்கவும், பதிவிடவும் உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தளத்தில் வீடியோ பதிவிடுவதன் மூலம் வருவாய் ஈட்டமுடியும் என்பதால் இது ஒரு வருமானம் ஈட்டும் தளமாகவும் இருந்துவருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் யூ டியூப் வலைத்தளம் வேகமாக வளர்ந்துள்ளதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சூசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், 'இந்தியாதான் தற்போது யூ டியூப் தளத்தின் மிகப்பெரிய சந்தை. ஏனென்றால் ஒரு மாதத்திற்கு இந்தியாவிலிருந்து 265 மில்லியன் பேர் வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். மேலும், யூ டியூப் வலைத்தளம் பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் பிறத்துறை தகவல்களை எளிதில் தருவதால் அதை அதிகளவில் மக்கள் பார்த்து ரசிக்கின்றனர்' என்றார்.

'அதேபோல், இந்தியாவில் கடந்த ஓராண்டில் மொபைல் போனில் யூ டியூப் தளத்தைப் பார்ப்பது 85 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அத்துடன் ஐந்து வருடங்களுக்கு முன் வெறும் இரண்டு பேர் மட்டும்தான் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டிருந்தனர். தற்போது, இந்தியாவில் 1200 பேர் மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்து செயல்பட்டு வருகின்றனர். இதுகடந்த 5 ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையைவிட அதிகமாகும். யூ டியூப் தளத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் மொபைல் டேட்டா கட்டணம்தான் மிகப்பெரிய காரணமாக உள்ளது' என சூசன் தெரிவித்துள்ளார். '

மலிவு விலை கட்டணத்தால் பார்வையாளர்கள், யூ டியூப் மற்றும் மற்ற வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தை தலைகீழாக மாற்றியுள்ளனர் என்று சூசன் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் 95 சதவிகிதம் பேர் தங்களது மொழி சார்ந்த வீடியோக்களையே அதிகம் பார்த்து ரசிக்கின்றனர். இந்தியாவில் யூ டியூப்பில்  கல்வி சார்ந்த வீடியோக்களையே அதிகம் பேர் பார்க்கின்றனர். மேலும் புதுவிதமான கருத்துக்களை உருவாக்குவதில் யூ டியூப்பில் பெரும் புரட்சியே நடைப்பெற்று வருகிறது. யூ டியூப் பார்ப்பதில் அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது.

YOUTUBE, INDIA, AMERICA, MARKET, SUBCRIBERS