‘பொறுமையாக க்யூல நிக்கும் பிரபல ஹீரோ’.. வாக்களிப்பது சிறப்பு.. வரிசையில் நிற்பது பொறுப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே-19 வரை 7 கட்டமாக நடைபெறும் என்று முன்னமே அறிவிக்கப்பட்டது போலவே, இந்தியாவின் 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

‘பொறுமையாக க்யூல நிக்கும் பிரபல ஹீரோ’.. வாக்களிப்பது சிறப்பு.. வரிசையில் நிற்பது பொறுப்பு!

இவற்றோடு ஆந்திரப்பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இவற்றுள் ஆந்திராவைப் பொருத்தவரை 319 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கடும் போட்டியில் இருக்கின்றன.

தெலுங்கானாவைப் பொருத்தவரை 10 சதவீதம் வாக்குகள் விரைவாக பதிவாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஜனநாயகக் கடமை என்பதை நிரூபணம் செய்யும் வகையில் நடிகர், நடிகையர், அரசியல் தலைவர்களும் நேரடியாகச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

இவர்களுள் தெலுங்கு பட நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று காத்திருந்து மக்களோடு மக்களாக தானும் ஒரு சாதாரண குடிமகனாக வாக்களித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வாக்களிப்பதை பொருத்தவரை, அது எல்லோருடைய உரிமையாகவும் கடமையாகவும் இருப்பதால் அங்கு அவற்றிற்கே முன்னுரிமை என்பதை முன்னிறுத்தி இதுபோன்ற நிகழ்வுகள் நெகிழ்ச்சியூட்டுவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதேபோல் நடிகையும் அரசியலாளருமான ரோஜா, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்ட பலரும் தங்களது வாக்குகளை குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் பதிவு செய்துள்ளனர்.