லாபம் 82 கோடி... நஷ்டம் 756 கோடி... மரண அடி வாங்கிய பிரபல 'டெலிவரி' நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

2018-2019-ம் ஆண்டில் 756.42 கோடி நஷ்டத்தை சந்தித்து இருப்பதால் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான புட் பாண்டா உணவு டெலிவரி பிசினஸில் இருந்து விலகினாலும் ஆச்சரியமில்லை என கூறப்படுகிறது.

லாபம் 82 கோடி... நஷ்டம் 756 கோடி... மரண அடி வாங்கிய பிரபல 'டெலிவரி' நிறுவனம்!

தற்போது ஸ்விக்கி, உபேர் ஈட்ஸ், சொமாட்டோ, புட் பாண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் உபேர் நிறுவனம் உபேர் ஈட்ஸையும், ஓலா நிறுவனம் புட் பாண்டா நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. இதில் ஏகப்பட்ட ஆபர்கள், தள்ளுபடி போன்றவை காரணமாக புட் பாண்டா நிறுவனம் தொடர் நஷ்டத்தில் தத்தளித்து வருவதாக கூறப்படுகிறது.

2017-2018-ம் ஆண்டில் 72.84 கோடி லாபத்தையும், 227.95 கோடி ரூபாய் நஷ்டத்தையும் சந்தித்து இருப்பதாக கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் புட் பாண்டா அறிக்கை சமர்ப்பித்து இருந்தது. இந்த நிலையில் 2018-2019-ம் ஆண்டில் 81.77 கோடி லாபத்தையும், 756.42 கோடி நஷ்டத்தையும் சந்தித்து இருப்பதாக புட் பாண்டா தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம், ''உணவு டெலிவரி கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு துறை ஆகும். இதில் நாங்கள் முன்னதாகவே கால்பதித்து விட்டோம். இதனால் வாடிக்கையாளர் சேவை, சந்தை நிலவரம், லாபம் போன்றவற்றில் தற்போது நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. விரைவில் வாடிக்கையாளர் சந்தை மதிப்பை முன்னிறுத்தி எங்களது சந்தை மதிப்பை உயர்த்துவோம்,'' என தெரிவித்துள்ளது.

இதேபோல ஸ்விக்கி நிறுவனம் 2018-2019-ம் ஆண்டில் 2364 கோடி ரூபாயை நஷ்டமாகவும், சொமாட்டோ நிறுவனம் 2058 கோடி ரூபாய் நஷ்டமடைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOODPANDA