ஜனவரி 16-ம் தேதி 'பொங்கல்' விடுமுறை ரத்தா?... பள்ளிக் கல்வித்துறை 'அறிக்கையால்' பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளிக்கல்வித்துறை அறிக்கையால் ஜனவரி 16-ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் வரும் ஜனவரி மாதம் 16-ம் தேதி பள்ளி மாணவர்களுடன் டெல்லியில் கலந்துரையாடும் பரிஷ்கா பி சார்ச்சா எனும் நிகழ்ச்சியை தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பிரத்தியேக யூடியூப் பக்கம் ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பார்ப்பதற்கான வசதிகளை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 14-ம் தேதி தொடங்கும் பொங்கல் ஜனவரி 16 வரை தொடர்வதால் அன்றைய தினம் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை ரத்தாகுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
குறிப்பாக பெரு நகரங்களில் வசிக்கும் மாணவர்கள் பொங்கல் விடுமுறையையொட்டி ஊருக்கு சென்று விடுவார்கள் என்பதாலும், அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதாலும் இந்த நேரலை ஒளிபரப்பை மாணவர்கள் காண்பது சாத்தியமா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை விரைவில் விளக்கம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.