பிரபல ‘பிஸ்கட்’ நிறுவனம் 10,000 பேரை வேலையைவிட்டு நீக்க முடிவு..? அதிர்ச்சியில் ஊழியர்கள்..! காரணம் என்ன..?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பிரபல பிஸ்கட் நிறுவனமான பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ‘பிஸ்கட்’ நிறுவனம் 10,000 பேரை வேலையைவிட்டு நீக்க முடிவு..? அதிர்ச்சியில் ஊழியர்கள்..! காரணம் என்ன..?

மும்பையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் பிரபல பிஸ்கட் நிறுவனமான பார்லே, இந்தியா முழுவதும் பிஸ்கட் உற்பத்தி செய்யும் 10 பிளான்ட்டுகளை அமைத்துள்ளது. இதில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். முன்பு 12 சதவீதமாக இருந்த பிஸ்கட்டின் சேவை வரி, ஜி.எஸ்.டி -யில் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதனை அடுத்து பார்லே நிறுவனம் பிஸ்கட்டுகளின் விலையை கணிசமாக உயர்த்தியது. இதனால் பிஸ்கட் விற்பனை சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பிஸ்கட்டிகளின் மீதான சேவை வரியை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசிடம் இருந்து சாதகமான முடிவு வரவில்லையென்றால் 8000 முதல் 10,000 வரை ஊழியர்கள் வேலையை இலக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PARLE, LAYOFF, EMPLOYEES, BISCUIT, GST