BGM Shortfilms 2019

'சரி.. என்னதான் கார் மேல'.. பிரியம் இருந்தாலும்.. 'அதுக்குன்னு இப்படியா?'.. பெண் செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

கார் பிரியர்களாக இருந்து, டெஸ்லா ரக கார்களை விரும்பாதோர் இருந்தால் அது ஆச்சரியம்தான்.

'சரி.. என்னதான் கார் மேல'.. பிரியம் இருந்தாலும்.. 'அதுக்குன்னு இப்படியா?'.. பெண் செய்த காரியம்!

கார்கள் மீதான ஆர்வம் இருப்பவர்கள் அல்லது விதவிதமான கார்களை வாங்க நினைப்பவர்களுக்கு டெஸ்லா ரக கார்கள், அவர்களது கனவுக் கார்கள் என்கிற பட்டியலில் கண்டிப்பாக இடம் பிடித்தே தீரும். அதிலும் தற்போது வந்திருக்கும் டெஸ்லா மாடல் 3 ரக காருக்கு ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர்.

ஆனால் 10 ஒரே நிறமுள்ள டெஸ்லா ரக கார்களை ஓரிடத்தில் நிறுத்தி வைத்தால், கார் ஓனரே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றின் சாவிகளும் அப்படித்தான். ஹோட்டலில் இருக்கும் பயோபாலிமர் இம்ப்ளிமெண்ட்டடு வகை சாவிதான் டெஸ்லா கார்களை லாக் செய்யவும், அன்-லாக் செய்யவும் பயன்படுகிறது.

இந்த நிலையில், RFID சிப் பொருத்தப்பட்ட வாலட்டை எடுத்து, காரின் பயோபாலிமரில் வைத்து காரை ஓப்பன் செய்யும் இந்தத் தொழில்நுட்பத்தையும் மீறி, தனது ஆர்ம்ஸில் இந்தத் தொழில்நுட்பத்தை பொருத்தி, அதாவது அந்த சிப்பை தனது ஆர்ம்ஸில் பொருத்தி, தனது காரை கையாண்டு வருகிறார் தீவிர டெஸ்லா மாடல் 3 காரின் ரசிகையான ஏமி.

GIRL, TESLA, CAR, CRAZY