‘கடைசி ஓவர், 3 -வது பால்’.. ‘வெகுண்டு எழுந்த ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 -வது ஒருநாள் போட்டியில் அம்பயரை கோபமாக பார்த்த ஜடேஜாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 -வது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 18 ரன்னிலும், ஷிகர் தவான் 20 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து களமிறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி காட்டினார். இதில் விராட் கோலி 120 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 71 ரன்களும் எடுத்து அசத்தினர். 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை இந்திய அணி எடுத்தது.
இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்யும் போது மழை குறிக்கிட்டது. அதனால் போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 270 ரன்கள் வெற்றி பெற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் அதிகபட்சமாக் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இப்போட்டியில் முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ராத்வெய்ட் வீசினார். அப்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா பேட்டிங் செய்தார். அப்போது ப்ராத்வெய்ட் வீசிய 3 -வது பந்து வொய்ட் -ஆக சென்றது. இதனை அம்பயர் சற்று தாமதமாக வொய்ட் என அறிவித்தார். அப்போது அம்பயரை ஜடேஜா கோபமாக பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.