‘நம்ம அம்பாசிடர் காரா இது..!’.. ‘56 வருஷ வரலாறு’.. அசரவைக்கும் நவீன மாடிஃபிகேஷன்..!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்பிரபல அம்பாசிடர் கார் மீண்டும் புதிய வடிவில் சந்தைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், பிரான்ஸ் நாட்டின் பிஜோ நிறுவனத்திடம் இருந்து அம்பாசிடர் கார் பிராண்டினை கைப்பற்றியது. கடந்த 1954ம் ஆண்டு ஹிந்துஸ்தன் மோட்டாஸ் அறிமுகம் செய்த லேண்ட்மாஸ்டர் என்ற பெயரில் வந்த மாடலே 1958ம் ஆண்டுக்கு பிறகு அம்பாசிடர் என பெயர் மாற்றம் பெற்று விற்பனைக்கு வந்தது. இந்திய குடும்பங்கள், அரசியல்வாதிகளின் ஃபேவரைட் காராக அம்பாசிடர் வளம் வந்தது. ஆனால் அடுத்தடுத்து வந்த நவீன கார்களில் வரவால், அம்பாசிடர் சந்தையில் வீழ்ச்சியடைந்தது. இதனால் 56 ஆண்டுகளாக கொடிகட்டு பறந்த அம்பாசிடர் மாடல் கார் 2014ம் ஆண்டு சந்தையில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் மாடிஃபிகேஷன் நிறுவனமான டிசி அம்பாசிடர் காரை தற்போது மாடிஃபிகேஷன் செய்துள்ளது. இந்த கார் தற்போது மின்சாரத்தை கொண்டு இயங்கு வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் இதன் தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, பல சொகுசு வசதிகளும் இக்காரில் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் கார் அம்பாசிடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நவீன மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ள அம்பாசிடர் கார் எப்போது சந்தைக்கு வரும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.