'மறைந்த ராணுவ வீரர்களுக்கு, நாம் என்ன செய்ய முடியும்?.. இதோ'.. கிரிக்கெட் பிரபலம் அதிரடி!
Home > தமிழ் newsபுல்வாமா தாக்குதலில் 44 CRPF ராணுவ வீரர்கள் மரணம் அடைந்த நிலையில், அவர்களின் பிள்ளைகளுக்கான கல்விச் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.
ஜம்மூ காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகர் வரை சென்ற 2 ராணுவ பேருந்துகளை தற்கொலைப்படையினர் வெடிபொருட்களை வைத்து தாக்கினர். ஜைஸ் இ முகமது அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியாவில் பலரும், ஜைஸ் இ முகமது அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து பலியானவர்களின் சடலங்கள் அவரவர் சொந்த ஊருக்கு ராணுவ மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன் மறைந்த வீரர்களின் பூத உடல்கள் அவரவர் சொந்த ஊர்களில் அரசு மரியாதையுடன்nஅடக்கம் செய்யப்பட்டன. இதனிடையே இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கண்டனங்களை எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் இறந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளை, தான் ஏற்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அவர், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது அவர்களுக்கு போதுமானதாக இருக்காது. ஆகையால் உயிரழந்தவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவினை, தான் ஏற்று அவர்களை தன்னுடைய சேவாக் சர்வதேச பள்ளியில் படிக்க வைப்பதாக உறுதி கொடுத்துள்ளார்.
Nothing we can do will be enough, but the least I can do is offer to take complete care of the education of the children of our brave CRPF jawans martyred in #Pulwama in my Sehwag International School @SehwagSchool , Jhajjar. Saubhagya hoga 🙏 pic.twitter.com/lpRcJSmwUh
— Virender Sehwag (@virendersehwag) February 16, 2019