‘பிரகாஷ்ராஜையே கதற விடுறீங்களா?..’ ஆங்கரை வெச்சுசெஞ்ச ஆர்.ஜே.பாலாஜி!
Home > தமிழ் newsஆர்.ஜே.வாக, சமூக ஆர்வலராக இருந்து குணச்சித்திர நடிகராக வெள்ளித் திரையில் தோன்றியவர் பாலாஜி. தற்போது அவரது எழுத்துப் பங்களிப்பிலும், நடிப்பிலும் வெளியாகவிருக்கும் எல்.கே.ஜி திரைப்படத்தை பற்றி அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அவர் அளித்துள்ள காரசாரமான பேட்டியில் அவர் அளித்த சுவாரஸியமான பதில்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அந்த பேட்டியின் முழுவிபரங்கள் இங்கே..
ஆர்.ஜே.பாலாஜி பேசிய பதில்களின் சுருக்கம்:
இப்போ ஒரு பிட்டு படம் எடுத்திருந்தா, எப்படி இந்த படத்துக்கு புரடியூசரை ஒத்துக்க வைச்சாங்க…அப்படினு சொல்லலாம். சமூதாயத்துக்கு தீங்கு சொல்லக்கூடிய படம் எடுத்திருந்தாலும் இதே கேள்வி எழலாம். எனக்கு இந்த படத்தின் மீது ரெஸ்பான்ஸ் இருந்திருந்தது. இந்த படத்தை 55 தடவை எடிட்டிங், மிக்ஸிங், டப்பிங் எல்லாத்திலும் பார்த்துட்டேன். அப்போவும் நியாயமான சிட்டிசனா இந்த படத்து மூலமா காசு வரணும்ங்குறத விட 3 மாசத்துல வருகிற எலக்ஷனுக்கு முன்னாடி இத பாக்கிற ஒரு காலேஜ் படிக்கிற பையனை, முதல் தடவையா ஓட்டு போடுவதற்கு முன்னாடி ஒரு பத்து நிமிசம் யோசிக்க வைக்கிறது தான் எனக்கு இந்த படத்தோட வெற்றின்னு தோணுச்சு. இந்த மாதிரி படத்த 25 வருஷமா 50 இன்ஸ்டியூசன் வச்சியிருக்கிற ஒரு கல்வியாளர் (அவர் காலேஜியில் 10-20 சதவீதம் பேர் ஃபிரியா படிச்சிட்டுருக்காங்க) ஒத்துக்கிட்டதுல எனக்கு ஆச்சரியமில்லை.
இத கிண்டல் பண்ற படமா எடுக்கல. கிண்டல் பண்ற விஷயங்கள் இருக்கும். சிரிக்கிற விஷயங்களும், ஹீயூமர் விஷயங்களும் இருக்கும்.எண்டெர்டெயின்மெண்ட் எல்லாமே இருக்கும். அத தாண்டி நான் ஓபனாக என் புரொடியூசர் கிட்ட சொல்லியிருக்கேன். எல்லா அரசியல்வாதிகளையும் அழைத்து நான் இந்த படத்தை ஸ்கீரீன் பண்ணேன்னா… இந்த படத்த எல்லாமே சூப்பரான படம் கரெக்டான படம் அப்டின்னு சொல்லிட்டு போவாங்களே தவிர, ‘ஏன் இந்த படத்துல என்ன போய் இப்டி சொன்ன?’ அப்படின்னு சொல்லிட்டு எந்த பார்ட்டியும் சரி, இண்டிஜூவலும் சரி கேள்வி கேட்க மாட்டாங்க.
இந்த படம் எலக்ஷன் அன்னைக்கு ரிலீஸ் பண்ணனும்னு பிளான் இல்ல. நம்மூர்ல எப்ப எலக்ஷென் வருதுன்னு தெரியல. உள்ளாட்சி தேர்தலே இத்தன நாளா வரல. எலெக்ஷன் வர வரவரைக்கும் காத்திருந்தால் காத்திருக்க வேண்டிதான். எங்களுக்கு படம் ரெடி ஆனதுக்கு அப்புறம் ரிலீஸ் பண்ணிடனும்னுதான் பிளான். ஆனா பொங்கலுக்கு இலவச வேஷ்டி சட்டைகளுடன் வரோம் என போஸ்டர் வெளியிட்டுயிருந்தோம். ஆனா பேட்ட, விஸ்வாசம் படத்துக்கு நடுவுல வந்திருந்தா நசுங்கி போயிருப்போம். அந்த படங்கள் இன்னைய வர ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்போ எலக்ஷன் வர டைம்ல பிப்ரவரி 26 படம் வருகிறது.
அரசியல் சீனியர்களுக்கு என்ன தெரியுமான்னே தெரியல, சென்னைல வெள்ளம் வந்தப்போதிலிருந்தே என்ன ட்விட்டர்ல அசிங்கமா திட்டுறாங்க… எனக்கு இது பழக்கமே இல்ல, என்னடா நம்மல போய் திட்றாங்களே. ஆனால் நான் நல்ல வேலை தான் பண்ணிருக்கேன். ஆஸ்திரேலியாவில் இருந்து 2 ஆர்.ஜே , UK வில் இருக்கும் இந்தியன் நர்ஸ கிண்டல் பண்ணி அவங்க சூசைடு பண்ணிக்கிட்டாங்க. ஆனா நான் கிராஸ் டாக்ன்னு ஒரு ஷோ பண்ணேன். யாரவது அதுல மனைவியை கலாய்க்க சொல்லுவாங்க, பையன் அப்பாவ கலாய்க்க சொல்லுவாங்க.. அப்போ நாங்க கால் பண்ணி பேசுவோம். கடைசியா அவங்க கிட்ட கேட்போம் இத ரேடியோவுல போடலாமான்னு. அவங்க ஐயோ சூப்பரா இருந்துது நல்லா இருந்துது… நான் நல்லா என் ஜாய் பண்ணுனேன்னு .. எப்ப ரேடியோவுல போடுவீங்கன்னு கேப்பாங்க. அத மட்டும்தான் ரேடியோவுல போடுவோம்.
இந்த புரோகிராம் வந்தப்போ IT-ல இருக்குறவங்க 100 பேர் ஆயிரம் போலி ID-யில இருந்து திட்டுனாங்க… வந்து நான் பிஜேபியைச் சேர்ந்தவர், ஆர்.எஸ்.எஸ்காரர், வந்தேறின்னு சிலர் திட்டினாங்க, நான் கிறிஸ்டியன், சன் டிவி ஆதரவாளன் என சிலர் திட்டினாங்க. இப்போ இவங்க திட்டுறதெல்லாம் இக்னோர் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அரசியல்வாதிகள் யாரும் இதுவரை LKG பட டிரெயலர் பாத்துட்டு திட்டல.
இப்போ நடக்குறததான் நாங்க சினிமாவாவுல காட்டுறோம். நாங்க யாரும் அட்டாக் பண்ணல, எதனால ரூரல் கிராமத்துல ஒரு ஓட்டு போடுறாங்கன்னு சென்னையில் இருக்குறவங்களுக்கு தெரியாது. வட்டச்செயலாளர், தலைவர், ஊராட்சி தலைவர் இவங்கள கன்சிடர் பண்ணிதான் படம் பண்ணுனோம். யாரும் எங்கள திட்டவும் இல்ல, கண்டுக்கவும் இல்ல. ஷான் ரோல்டன் வாய்ஸ்ல எத்தன காலம்தான் ஏமாற்றுவார்கள் பாடலை பாடச்சொல்லி கேட்டோம். அன்னைக்கு முடிவு பண்ணி இத ஓபனிங் சாங்-ஆ பாடினோம். 1955 ல வந்த அந்த பாட்டு இந்த காலத்துக்கும் பொருந்தும்.
இந்த படத்துல ஜே.கே ரெட்டி, ஐசரி கணேஷின் நண்பர். ராம்ராஜ் பாண்டியன் கேரக்டருக்கு நடித்தார். எனக்கு ரெகுலரான அப்பா வேணாம்னு நாஞ்சில் சம்பத் சார நடிக்க வச்சோம். நேஷனல் மீடியாவுக்கு டெல்லி, பாம்பேதான் டிஆர்பி. வடகிழக்கு, தென்னிந்திய மக்களின் பிரச்சனைகளில் நேஷனல் மீடியாக்கள் ரெஸ்பான்ஸ் எடுத்துக்கொள்வதில்லை. நான் இருக்குற மீடியா, சினிமா , டிவியில என்னுடைய செயல் தமிழ்நாட்டை தள்ளிவைப்பதோ, இந்தியாவை திருத்துவதோ, பாகிஸ்தானை திருத்துவதையோ என எதுவும் இல்ல. ஈரோடு பகக்த்துல வீடியோ ஷூட் பண்ணிட்டு இருந்தபோது, நாலு பசங்க வந்து போட்டோ எடுத்துக்கிட்டாங்க, அவங்க அண்ணா நீங்க சொன்னீங்கல்ல, எல்லா பேப்பரும் படிங்க அப்பதான் நாலு பேர கலாய்க்க முடியும்ன்னு அதனால பேப்பர் படிக்கிறோம் என்று சொன்னார்கள். இதுதான் நான் சாதிச்சி கிழிச்சது. இப்ப படம் இருக்கு என்ன பத்தி பேச, ஆனால் ஒரு மாசம் கழிச்சி பேசமாட்டாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஹீரோவா இருந்தவங்க பலர் இப்ப காமெடியனா ஆகிட்டாங்கள்ல.
சிவக்குமார் சார் செல்போனை உடைச்சத பத்தி பேசுறப்போ, எனக்கும் இதுபோல ஒரு சம்பவம் நடந்துச்சி. ரயில்வே ஸ்டேஷன்ல என்னோட குழந்தை வாந்தி எடுத்துக்கிட்டு இருந்தது. அப்போ ஒருத்தர் வந்து எங்கிட்ட, ‘சார் ஒரு செல்ஃபி’ன்னு கேட்டாரு. எனக்கு அப்போ கோவம் வந்து திட்டிட்டேன். அவரு சாரி சொல்லிட்டு போயிட்டாரு!