அதிகாரம் யாருக்கு? : 7 பேர் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்ற ‘ஆர்டர்’ நகலின் முழுவிபரம்!
Home > தமிழ் newsராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தி, நளினி மற்றும் மூவர் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பான சமீபத்திய ஆர்டர் நகலை, உச்சநீதமன்றம் தனது அலுவல் ரீதியலான இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், அதன் சம்மரி போர்ஷன் அல்லது ஆர்டர் போர்ஷன் எனப்படும் பத்தியில் கூறப்பட்டுள்ள முழுவிபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி,இந்த 7 பேரும் கொலைக்குற்ற தண்டணைக்கு பணிக்கப்பட்ட பிரிவு 161-ன் கீழ் தங்களை வெளிவிடுவதற்கான மனுவை ஆளுநரிடம் முறையிடலாம். பழைய தீர்ப்பில், பிரிவு 435-ன் படி மத்திய புலனாய்வு வழக்கில் மாநில அரசு தன்னிச்சையாக செயல்படுவதற்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த சிக்கலால் தொடர்ந்து இழுபறியில் இருந்த இந்த வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்படும் விதமாகவே இந்த ஆர்டர் காப்பியில் இந்த 7 பேரை விடுவிப்பதற்கான அதிகாரம் , அதற்கான கன்சர்ண்டு அத்தாரிட்டியான ’எக்ஸிகியூட்டிவ் பவர் ஆஃப் தி ஸ்டேட்’க்கு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆளுநர் விடுதலை செய்ய இந்த சட்ட நடைமுறை பயன்படுத்தப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். மேலும் இந்த முடிவை ஆளுநர் எடுப்பதற்கான வழிமுறை பிரிவு 162-ல் குறிப்பிடப்படுகிறது. அதாவது ஆளுநர் இவ்விஷயத்தில் முடிவெடுக்க, மாநில அமைச்சரவையின் பரிந்துரையை கோரலாம் அல்லது நாடலாம்.
இந்த நேரத்தில்தான் அநேகமாக நாளை மாலை 4 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நிகழவுள்ளது. தற்போது இந்த கூட்டத்தில் மேற்கண்ட எழுவர் விடுதலை குறித்த பேச்சுவார்த்தை நிகழுமா? இந்த கூட்டம் அதிகாரப் பூர்வமாக நிகழுமா? உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன!