தியேட்டர் கேண்டீனில் MRP-யை விட கூடுதல் விலையா? பொதுமக்கள் புகார் அளிக்க புதிய ஆப்!

Home > தமிழ் news
By |
தியேட்டர் கேண்டீனில் MRP-யை விட கூடுதல் விலையா? பொதுமக்கள் புகார் அளிக்க புதிய ஆப்!

திரையரங்குகளில் விற்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் எம்ஆர்பி விலையை விட அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் பொதுமக்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்க ஏதுவாக புதிய செயலி ஒன்றை தொழிலாளர் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பாக தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 'தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர் கேண்டீன்களில் விற்கப்படும் உணவுப் பொருள்,குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள எம்ஆர்பி விலைக்கு மட்டுமே விற்பனை விற்க வேண்டும்.

 

ஆனால் அதை விட கூடுதலாக விற்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்ததால் அவ்வாறு தவறு செய்யும் தியேட்டர் கேன்டீன் மற்றும் உணவக உரிமையாளர்கள் மீது சட்டரீதியான தக்க நடவடிக்கைகளை எடுக்க சென்னை தொழிலாளர் ஆணையர் ரா.நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார்.

 

திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள், சாலையோர உணவகங்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்கள்,  பாக்கெட்-பாட்டில் உணவுப்பொருட்கள் மீது குறிப்பிட்டுள்ள தொகைக்கு மேல் விற்பனை செய்தல் சட்டப்படி குற்றம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.                     

                                                                                                                                                                    அவ்வாறு விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது  புகார் செய்ய                                தொழிலாளர் நலத்துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் TN-LMCTS (TAMILNADU LEGAL METROLOGY COMPLAINT TRACKING SYSTEM) என்ற மொபைல் செயலியை Google Play store மூலம் பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாக நுகர்வோர்கள், பொதுமக்கள் புகார் அளித்து உரிய நிவாரணம் காணலாம் என தெரிவிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

THEATRE, MRP, PRICE