மோடி பேசிய AFSPA சட்டம் என்பது என்ன?

Home > தமிழ் news
By |
மோடி பேசிய AFSPA சட்டம் என்பது என்ன?

இந்திய நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி வைத்துவிட்டு, கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் சுதந்திர தின சிறப்பு உரை நிகழ்த்தினார்.

 

அப்போது நாடு சரியான திசையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும், ஜிஎஸ்டி -யால் பொருளாதார ரீதியிலான தன்னிறைவை இந்தியா அடைந்துள்ளது என்றும் கூறிய அவர், AFSPA எனப்படும் சட்டம் ஒன்றைப் பற்றி குறிப்பிட்டார்.

 

மேலும் கூறுகையில், வடமாநிலங்களில் இந்த சட்டம் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக மோடி பெருமிதமாக குறிப்பிட்டிருந்தார். பெரும் சர்ச்சைகளை  உருவாக்கிய இந்த பேச்சில் அவர் குறிப்பிட்டிருந்த சட்டம்  போர்க்காலங்களிலோ அல்லது அவசர காலத்திலோ கொண்டுவரப்படும் கொடுங்கோல் ராணுவ சட்டம்தான்.

 

அந்த சட்டம் காஷ்மீர் போன்ற சில இடங்களில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நிலைத்து வரும் சட்டம். அதுபற்றிய விமர்சனப் பார்வையோடு, சுதந்திர தினத்தில் பேசிய மோடியின் பேச்சுக்கு ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

கொடுங்கோல் ராணுவ சட்டத்துக்கு எதிரான; அமைதியான ஒரு விமர்சனத்தை சுதந்திர தினத்தன்று மோடி முன்வைத்திருப்பது பலருக்கும் அந்த சட்டம் பற்றிய புரிதலைக் கொடுத்துள்ளது. எனினும் வடமாநிலங்களில் நீக்கப்பட்ட இந்த சட்டம் இன்னும் காஷ்மீரில் இருப்பது குறித்து இணைய வாசிகள் பேசத் தொடங்கியுள்ளனர்.

NARENDRAMODI, AFSPA, INDIA, INDEPENDENCEDAY2018