'இரண்டு பேருக்கும் தடையா?...'அப்படி பேச உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது'? கடுப்பில் பிசிசிஐ!
Home > தமிழ் newsதனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்துமீறி பேசியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து,ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல இயக்குனர் கரண் ஜோகர் நடத்தும் ‘காஃபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில்,பிரபல சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்பது வழக்கம்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டா் ஹா்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்கள்.இந்நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து வரம்பு மீறி பேசியதாக கடும் சர்ச்சை வெடித்தது.
அதுமட்டுமல்லாமல் சச்சின், விராட் கோலி இவா்களில் யாா் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு இருவரும் விராட் கோலி என பதில் அளித்தனா். இதனால் கடுப்பான ரசிகா்கள், சச்சின், தோனியை விட கோலி சிறந்தவர் இல்லை என,ட்விட்டரில் இருவரையும் ஒரு வழி ஆக்கிவிட்டார்கள்.
இதனிடையே கடுமையாக எழுந்த எதிர்ப்பினை தொடர்ந்து மன்னிப்பு கேட்ட ஹா்திக் பாண்டியா யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை. யாரையாவது காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் சா்ச்சைக்குரிய கருத்து குறித்து ஹா்திக் பாண்டியாவும்,கே.எல்.ராகுலும் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதையடுத்து இருவரும் பிசிசிஐயிடம் விளக்கம் அளித்தனர்.ஆனால் அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள் தலைவர் வினோத் ராய் ''தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க யார் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது.இது போன்று பேசுபவர்களுக்கு 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.இதனால் இருவருக்கும் 2 ஒருநாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.