பிரபல ‘லக்கி’ கிரிக்கெட் பிளேயருக்கு நன்றி சொல்லி ட்வீட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Home > தமிழ் news
By |

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஆல்பி மார்க்கலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் அலுவல் ரீதியான ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளது.

பிரபல ‘லக்கி’ கிரிக்கெட் பிளேயருக்கு நன்றி சொல்லி ட்வீட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்பி மார்க்கல் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்தை தனது ஆல்ரவுண்டர் திறமையால் கைக்குள் வைத்துக்கொண்டவர். சிறப்பான பேட்டிங் மற்றும் மெரட்டலான பந்துவீச்சு இரண்டும்தான் இவர் 2008 முதல் 2013 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்ததற்கு முக்கிய காரணம். கடந்த 2015-ல் தென்னாப்பிரிக்க அணியுடனான டி20 போட்டியில் இந்திய அணி மோதியது. அதில் தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் இந்தியாவுக்கு எதிராக விளையாண்டவர் பின்னர் அந்த கழட்டிவிடப்பட்டார்.

இந்த நிலையில்தான் அவர் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில், கிரிக்கெட் எனும் களத்தில் தனக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், கிரிக்கெட்டில் தனது 20 வருஷ கால பயணம் மறக்க முடியாத நினைவுகளை அளித்ததாகவும் கூறியவர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்துக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

இந்நிலையில் அத்தனைச் சிறப்பான வீரர் விடை பெறும் செய்தியை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆல்பி மார்க்கலுக்கு நன்றி சொல்லியுள்ளது.

CSK, IPL, SOUTHAFRICA, CRICKET, TWITTER, VIRAL, ALBIE MORKEL