'பிரதமரிடம் மனு அளிக்க முடியவில்லை'.. ஆத்திரத்தில் பேருந்துக்குத் தீவைத்த பெண்!

Home > தமிழ் news
By |
'பிரதமரிடம் மனு அளிக்க முடியவில்லை'.. ஆத்திரத்தில் பேருந்துக்குத் தீவைத்த பெண்!

பிரதமர் மோடி தனது 68-வது பிறந்தநாளை ஒட்டி தனது மக்களவை தொகுதியான வாரணாசி தொகுதிக்கு வருகை புரிந்தார்.இந்நிலையில் அவரைக்  காண முடியாத ஆத்திரத்தில், அரசுப்பேருந்துக்கு தீ வைத்து எரித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

 

பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.பிரதமர் மோடியை நேரில் காண்பதற்கு ஏராளமான மக்கள்  வந்திருந்தார்கள்.இந்நிலையில் பெண் ஒருவர் பிரதமரை காண்பதற்கு கடுமையாக முயற்சி செய்தார்.ஆனால் அவரால் பிரதமரைக் காண இயலவில்லை.இதனால் கடுமையான விரக்தியில் இருந்தார்.

 

தொடர்ந்து அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்கு அவர் சென்றார்.அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்து  லக்னோவுக்கு புறப்படுவதற்காக ஒரு பஸ் காத்திருந்தது. அதில் பயணிகள் பலர் அமர்ந்திருந்தனர்.ஆனால், திடீரென யாரும் எதிர்பாராத வகையில், அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த பெட்ரோலை அரசு பேருந்து மீது ஊற்றி  தீவைத்துவிட்டு தப்பினார்.

 

அந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் அமர்ந்திருந்தனர்.தீ வைத்ததை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது பேருந்திற்கு தீ வைத்த பெண் வந்தனா ரகுவன்ஸி என்பது தெரியவந்தது. அந்தப்பெண் குறித்து விவரங்களை அறிந்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

 

இது குறித்து வாரணாசி மாவட்ட போலீஸ் எஸ்.பி.தினேஷ் குமார் சிங் கூறுகையில், “ உத்தரப்பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து வந்தனா ரகுவன்சி உண்ணாவிரதம் இருந்துவந்தார். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திக் கடந்த மாத 29-ம் தேதி போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

இந்நிலையில், பிரதமர் மோடியைச் சந்தித்து தனது கோரிக்கையை தெரிவிக்க முயன்ற, ரகுவன்சியால் பிரதமரைச் சந்திக்க இயலவில்லை. இதனால், ஆத்தமிரமைடந்து வாரணாசியில் உள்ள கண்டோன்மென்ட் பஸ்நிலையத்தில் நின்றிருந்த பஸ்ஸுக்கு தீ வைத்துள்ளார். இவர் மீது பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்,'' எனத் தெரிவித்தார்.