'இந்திய இறையாண்மைக்கு எதிராக பேச்சு'...சஸ்பெண்ட் செய்யப்பட்ட உடுமலை கவுசல்யா!

Home > தமிழ் news
By |

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் இருந்து உடுமலை கவுசல்யாவை சஸ்பெண்டு செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

'இந்திய இறையாண்மைக்கு எதிராக பேச்சு'...சஸ்பெண்ட் செய்யப்பட்ட உடுமலை கவுசல்யா!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கௌசல்யாவிற்கு குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.இவர் சமீபத்தில் கோவை வெள்ளலூரைச் சேர்ந்த நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார்.இந்த திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சக்தி மீது கடுமையான குற்றசாட்டுகள் எழுந்தன.

நிமிர்வு கலையகத்தில் பறை கற்க வந்த சில பெண்களுடன் சக்திக்கு தொடர்பு இருந்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன.மேலும் திருநங்கை ஒருவரும் சக்தி மீது கடுமையான குற்றசாட்டுகளை எழுப்பினார்.இது தொடர்பாக பல ஆடியோ உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனத்திற்கு கவுசல்யா அளித்த பேட்டியில்,இந்திய இறையாண்மைக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்ததாக கடுமையான குற்றசாட்டுகள் எழுந்தன.இதையடுத்து கவுசல்யாவை சஸ்பெண்ட் செய்து குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்ட் உத்தரவிட்டுள்ளது.

HONOURKILLING, UDUMALAPET, KAUSALYA