'2019 உலக கோப்பை இந்தியாவுக்கு தான்'...இவரே இப்படி ஓப்பனா பேசிட்டாரு!

Home > தமிழ் news
By |

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டியில்,இந்திய அணியே நிச்சயம் வெற்றி பெரும் என ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.இந்திய அணியை வெல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

'2019 உலக கோப்பை இந்தியாவுக்கு தான்'...இவரே இப்படி ஓப்பனா பேசிட்டாரு!

2021ல் சாம்பியன்ஸ் டிரோபி மற்றும் 2023ல் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்கள்,இந்தியாவில் நடப்பதற்கு வரி சலுகை வழங்கியதற்காக பிசிசிஐ 160 கோடி ரூபாய் கட்ட வேண்டும் என்ற விவகாரத்தில் ஐசிசி தலைவர் திடீர் ஆதரவு தெரிவித்து பேசி இருந்தார்.

இந்நிலையில்  உலகக் கோப்பை 2019 தொடரில் இந்திய அணியினை வெல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என ரிச்சர்ட்சன் தற்போது தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசிய அவர் பல வருடங்களாக இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.அதே போல் பல திறமையான வீரர்கள் தென் ஆப்ரிக்கா அணியில் விளையாடி வருகிறார்கள்.இவர்கள் பல முறை உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்று விளையாடி இருக்கிறார்கள்.ஆனால் இவர்களால் ஒரு முறை கூட உலககோப்பையினை வெல்ல முடியவில்லை.

அதே நேரத்தில் இம்முறை போட்டி என்பது மிக கடுமையாக இருக்கும்.எந்த அணியாக இருந்தாலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினை வெல்வது மிக கடுமையான ஒன்றாக இருக்கும்.தற்போது இந்திய வீரர்களின் செயல்பாடுகள் நல்ல நிலையில் இருப்பதால் இந்திய அணி உலககோப்பையினை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

BCCI, CRICKET, VIRATKOHLI, ICC, DAVID RICHARDSON