இரவு நேரம் மெரினா பீச்சில் பெண்ணை கொன்று புதைத்த 2 பேர் கைது!

Home > தமிழ் news
By |
இரவு நேரம் மெரினா பீச்சில் பெண்ணை கொன்று புதைத்த 2 பேர் கைது!

மெரினா கடற்கரை பல ரகசியங்களை தன்னுள் புதைகொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக அண்மையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தேறியது. மிக அண்மையில் ஓரிரு நாட்களுக்கு முன்னாள் மெரினாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். அங்கு அவரது மொபைல் போன், 4 ஜோடி செருப்புகள், மது பாட்டில்கள் இருந்துள்ளன. அந்த போன் நம்பரை வைத்து திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா ஆகியோரிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.


அப்போதுதான் மதுரையை சேர்ந்தவர் கலைச்செல்வி என்பதும், தன் கணவருடன் உண்டான தகராறினால் அவரிடம் இருந்து பிரிந்து சென்னை வந்தடைந்து, மெரினா மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் விலைமாதுவாக செல்லத் தொடங்கியுள்ளார்.   பின்னர் வினோத்குமார் என்பவருடன்  பழகியுள்ளார். இப்படி இருக்க ஒருநாள் கலைச்செல்வி தனது தோழி ஒருவரை வினோத்குமாரிடமும் அவரது நண்பர் சூர்யா என்பவரிடமும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.  அதன் பின்னர் கலைச் செல்வியுடன் பழகுவதை நிறுத்திய வினோத் மற்றும் சூர்யா இருவரும் கலைச்செல்வியின் தோழியுடன் பழகியுள்ளனர்.


இந்த நிலையில் சம்பவம் நடந்த நாள் அன்று, அதிருப்தியில் இருந்த கலைச்செல்வி சென்னை மெரினாவில் இரவு நேரம் வினோத்குமார், சூர்யா இருவருடனும் மது அருந்திக்கொண்டே பேசியுள்ளார். அதுசமயம் தன்னுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டு தன் தோழியிடம் பழகுவதை பற்றி கலைச்செல்வி பேச, சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றவே, போதையில் இருந்த வினோத்தும் சூர்யாவும்  கோபத்தில் பீர் பாட்டிலால், கலைச்செல்வியின் தலையில் அடித்து கொன்று அங்கேயே புதைத்துவிட்டுச் சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பலரும் இதுபோன்ற சம்பவங்களால் மெரினா கடற்கரைக்கு இரவு நேரம் செல்வதற்கு அச்சம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

TAMILNADU, MURDER, CHENNAI, MARINA, BEACH