‘நீங்களே டாக்டர் என கையெழுத்து போடுங்கள்’: மது போதையில் அரசு மருத்துவர் செய்த காரியம்!

Home > தமிழ் news
By |
‘நீங்களே டாக்டர் என கையெழுத்து போடுங்கள்’: மது போதையில் அரசு மருத்துவர் செய்த காரியம்!

திருவையாறு அரசு மருத்துவமனை மருத்துவர் மகபூப் பாட்ஷா, இரவு நேர டியூட்டியை மது அருந்திவிட்டு பார்த்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அவர்   விஷம் அருந்தி விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளியின் சிகிச்சை பதிவேட்டில், தன் கையெழுத்தை தனக்கு கீழே பணிபுரியும் செவிலியரையே போடச்சொல்லி அலட்சிட்யமாக இருந்துள்ள சம்பவம் பலரிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.


மது அருந்திவிட்டு தன் ஓய்வறையில் கதவைப் பூட்டிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவரிடம் அங்கு பணிபுரியும் செவிலியர் பெண், செல்போனில் பேசியபோது அந்த மருத்துவர் மகபூப் பாட்ஷா, ‘நீங்களே டாக்டருக்கான கையெழுத்தினை போடுங்கள்’ என்று கூறிய ஆடியோ ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டதால், பரபரப்பான நிலைமையில் மருத்துவ துறை அவரின் பணிக்கு உண்மையாக இல்லாத கண்டித்தக்க செயலின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவரை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

HOSPITAL, DOCTOR, INSINCERE, CARELESS, DRUNKDOCTOR, TAMILNADU, THANJAVUR