‘அஜித்தின் குழுவினர் தயாரித்த ஏர் டாக்ஸியில் அமைச்சர்.. பாராட்டு மழையில் தல!
Home > தமிழ் newsசென்னை நந்தம்பாக்கம் டிரேடு சென்டரில் மிக அண்மையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அஜித்தின் குழுவினரால் தயாரித்து, உருவாக்கி வைக்கப்பட்டிருந்த ஏர்டாக்ஸியின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருவதோடு, அதில் பயணம் செய்துள்ள அமைச்சர் ஜெயகுமாரின் புகைப்படமும் வைரலாகி வருகிறது.
அண்மையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் கையெழுத்தானதாகவும், இதனால் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கலாம் என்றும் தமிழக முதல்வர் பேசியிருந்தார். உலகம் முழுவதுமான பல்வேறு தொழில் முனைவோர்களால் வடிவமைக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப சாதனங்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதோடு நடிகர் அஜித்தின் தக்ஷா குழுவினரால் தயாரிக்கப்பட்ட ஏர் டாக்ஸி (சிறிய ஹெலிட்ரோன்) வைக்கப்பட்டிருந்தது.
நடிகர் அஜித், அண்ணா பல்கலைக் கழகத்துக்குட்பட்ட தக்ஷா என்கிற தொழில்நுட்ப புராஜக்ட் குழுவின் சிறப்பு ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். இந்த தக்ஷா குழுவினர் சமீபத்தில்தான் ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச போட்டி ஒன்றில் சாதனை புரிந்து 2-வது இடத்தை பிடித்தது.
இந்நிலையில், அஜித்தின் இந்த தக்ஷா குழுவினரால் வடிவமைக்கப்பட்ட 60 முதல் 80 கிலோ வரை எடையுடைய பொருட்களை தாங்கும் திறனுள்ள ட்ரோன் இந்நிகழ்ச்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 10 ஆண்டு உழைப்புக்கு பலனாய் உருவான இந்த ட்ரோன், ஆபத்து காலத்தில் பொதுமக்களுக்கு ஆம்புலன்ஸ் போல செயல்படும் வகையில் ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப் போலவே, நாம் செல்ல வேண்டிய இடத்தை இதில் கொடுத்துவிட்டால் அந்த திசைக்கு அழைத்துச் செல்லும். இந்த ஏர் டாக்ஸியால் தொடர்ந்து 45 நிமிடங்கள் (சுமார் 20 கி.மீ) பயணிக்கமுடியும் என்று கூறப்படுகிறது.
இந்த ஏர் டாக்ஸியில் தமிழக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பயணித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அஜித்தின் அசாத்திய தொழில்நுட்ப அறிவை அவரது ரசிகர்கள் புகழ்ந்து பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.
Exclusive : #Thala #Ajith Mentored #TeamDhaksha 's Drone Now in Chennai Trade Centre !! @rameshlaus pic.twitter.com/LZXqQxC1oQ
— Thala AJITH Fans North India🇮🇳™ (@NorthAjithFC) January 25, 2019