மூட்டைப்பூச்சியால் பறிபோனதா டெஸ்ட் மேட்ச் வாய்ப்பு..? அணியில் இடம் பெறாத வீரர்!

Home > தமிழ் news
By |

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஒருவரை மூட்டைப்பூச்சி கடித்ததால், அவர் தங்கியிருந்த ஹோட்டலின் அறைக்கு வெளியில் தூங்கியதாகவும், அதனால் அவர் டெஸ்ட் மேட்சில் கலந்துகொள்ள முடியாமல் போனதாகவும் வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூட்டைப்பூச்சியால் பறிபோனதா டெஸ்ட் மேட்ச் வாய்ப்பு..? அணியில் இடம் பெறாத வீரர்!

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அங்கு டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, பார்படாஸில் உள்ள மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதற்கிடையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் தங்கியிருந்த அறையில் மூட்டைப்பூச்சிகள் இருந்ததாகவும், அப்பூச்சிகள் ஸ்டூவர்ட் பிராடை கடித்ததாகவும் அதனால் அவர் அறைக்கு வெளியே உள்ள வராண்டாவில் இரவு தூங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டையும் எடுத்தார்.

ஆனாலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராடுக்கு இடம் கிடைக்காதது குறிப்பிடத்தக்கது. இதற்கு மூட்டைப்பூச்சி கடித்ததாக ஸ்டூவர்ட் பிராட் எழுப்பிய பிரச்சனை ஒரு காரணமாக கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

STUARTBROAD, ENGVWI, TEST, BEDBUG, ICC