தாயிடம் இருந்து சேய்க்கு HIV தொற்று பரவுவதை தடுப்பதில் உலக அளவில் தமிழகம் முன்னிலை..விஜய பாஸ்கர்!

Home > தமிழ் news
By |
தாயிடம் இருந்து சேய்க்கு HIV தொற்று பரவுவதை தடுப்பதில் உலக அளவில் தமிழகம் முன்னிலை..விஜய பாஸ்கர்!

இந்தியா எச்.ஐ.வி தொற்று பரவுவதில் இரண்டாம் இடம் வகிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மாறிவந்த சுகாதார பாதுகாப்புகளால் ஓரளவிற்கு எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்க முடிந்தது.

 

அதுமட்டுமல்லாமல், பாதுகாப்பான ரத்த பரிசோதனைகள், பாதுகாப்பான யூஸ்-அன்-த்ரோ சிரஞ்சிகள் பயன்படுத்தப்பட மருத்துவமனைகளில் அறிவுறுத்தப்பட்டு சில வருடங்களில் இந்நிலை மாறியது. ஆரம்ப சுகாதார  நிலையங்களிலும், பாதுகாப்பான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் மக்களுக்கு தகுந்த அளவில் விழிப்புணர்வு சென்றடைந்துள்ளது.  எனவேதான் தாயிடம் இருந்து சேய்க்கு எச்.ஐ.வி தொற்று பரவுவதை தடுப்பதில் உலக அளவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என்று தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

VIJAYABASKAR, TAMILNADU, TNHEALTHMINISTER, TNGOVT