3 வயது சிறுமியின் வாயில் அணுகுண்டை வைத்து பற்ற வைத்துவிட்டு ஓடிய இளைஞர்!

Home > தமிழ் news
By |
3 வயது சிறுமியின் வாயில் அணுகுண்டை வைத்து பற்ற வைத்துவிட்டு ஓடிய இளைஞர்!

உத்திர பிரதேசத்தில் தீபாவளி சமயத்தில் 3 வயது குழந்தையின் வாயில் அணுகுண்டு வெடியை வைத்து திரியை பற்ற வைத்து வெடிக்க வைத்ததில் பரிதாபமாக குழந்தைக்கு 50 தையல் போடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

உத்திர  பிரதேசத்தின் மில்லக் கிராமத்துக்குட்பட்ட சசிகுமாரின் மகளான இந்த சிறுமி தன் வீட்டு வாசலில் நின்று நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், ஹர்பால் எனும் பதின்பருவ இளைஞர் விளையாட்டாக நினைத்து குழந்தையின் வாயில் அணுகுண்டு எனப்படும் இருப்பதிலேயே பெரிய சத்தத்துடன் பெரு ஆற்றலுடன் வெடிக்கும் வெடியினை வைத்துள்ளார். 

 

இதனை யாரும் கவனிக்காத நிலையில், குழந்தையின் வாயில் இருந்த ஆட்டம் பாமின் திரியை பற்ற வைத்துவிட்டு பாய்ந்துவிட்டார் அந்த இளைஞர். திடீரென ஆட்டம் பாம் வெடித்ததால் குழந்தையின் வாய் உட்பட முகத்தின் பகுதிகள் சிதைய குழந்தை அலறும் சத்தம் கேட்டுவந்து பார்த்த பெற்றோர்கள் அதிர்ந்து போய் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது இந்த குழந்தை 50 தையல்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாள். 

FIREACCIDENT, FIRECRACKERS, BIZARRE, 3YEAROLDGIRL, BOY