பக்ஷிராஜன்தான் வரணும் போல.. அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்.. வைரல் வீடியோ!
Home > தமிழ் newsராமநாதபுரத்தில் இருந்து புதுக்கோட்டை ஆதனக்கோட்டை வழியாக தஞ்சாவூர் சென்ற அரசு பேருந்து ஒன்றினை இயக்கிச் சென்ற அரசு பேருந்து டிரைவர் ஏறக்குறைய ஒரு நிமிஷமாக செல்போனை நோண்டிக்கொண்டே அரசுப் பேருந்தினை இயக்கிச் சென்றுள்ளது அந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
வீடு, குடும்பம் என எல்லாவற்றையும் பிரிந்து வெகுநேரம் பலர் வேலை செய்கின்றனர். ஆனால் அவர்களைப் போல் நினைத்த நேரத்துக்கு டிரைவர்கள் வீட்டுக்கு போன் செய்து பேசுதல் என்பது அரிதுதான். எனினும் அப்படி வீட்டாருடன் போன் செய்து பேசுபவர்கள் கூட டியூட்டி நேரத்தில் ஓய்வான நேரத்தில்தான் அதைச் செய்வார்கள்.
அப்படி இருக்க, இந்த டிரைவர் அவ்வளவு நேரம் செல்போனில் வாட்ஸ் ஆப்பை பார்க்கிறாரா, எதையாவது படிக்கிறாரா என்பது தெரியவில்லை. எதுவா இருந்தாலும் அத்தனை பயணிகளின் நலனை கருத்தில் கொண்டுதானே அவர் பேருந்தை இயக்க வேண்டும். பேருந்தினை இயக்கும் போது ரோட்டை பார்த்து ஓட்டிக்கொண்டு சிந்தனையை வேறு எங்காவது கொடுத்துவிட்டாலே விபத்துக்கு வழிவகுக்கும்.
அப்படி இருக்க, ரோட்டையே பார்க்காமல் செல்போனை நோண்டிக்கொண்டு அரசு பேருந்து இயக்குநர் இத்தனை அலட்சியமாக வண்டி ஓட்டினால், இதையெல்லாம் தடுக்க 2.0 பக்ஷிராஜன்தான் வரவேண்டும் போல என்று பலரும் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளனர்.
Pakshirajan dhaan varanum! ராமநாதபுரத்திலிருந்து, புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை, வழியாக தஞ்சாவூர் சென்ற அரசு பேருந்தில் ஒரு அரிய காட்சி...
— bharathnt (@bharath1) December 30, 2018
தனது செல்போனில் வாட்ஸ் ஆப் -பார்த்துக் கொண்டே பஸ் ஒட்டிய டிரைவர். A forward! pic.twitter.com/bIxi2QeWXy