தீபாவளியை முன்னிட்டு ‘இத்தனை சதவீதம்’ உயரும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம்!
Home > தமிழ் news
பண்டிகை நாட்கள் வந்துவிட்டாலே போதும், பொதுவாகவே அரசு பேருந்து தொடங்கி, ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளுமே ரிசர்வேஷன்களால் நிரம்பி வழியும் நிலை உண்டாகும். எனினும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காதோர், கடைசி நேரத்தில் முடிவு செய்வோர் என பலரும் இருப்பதுண்டு.
முன்பதிவு செய்யாதவர்கள் சில நேரங்களில் அரசு பேருந்துகளில் வரிசையில் நிற்க வைத்து ஏற்றப்படுவர். இந்த நிலையில் பலரும் உடனடி முடிவாக ஆம்னி பேருந்துகளில் செல்ல நினைப்பார்கள். ஆனால் பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களைக் கேட்டால், ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் பேருந்தில் பயணம் செய்வதுதான் பண்டிகைக்கான மொத்த பட்ஜெட்டாகவே இருக்கும் என்கிற அளவுக்கு டிக்கெட்டுகளுக்கான கட்டணங்கள் இருக்கச் செய்யும்.
பின்னர் பேருந்துகளிடையே ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னர் கட்டணங்கள் முறைப்படுத்தப்பட்டன. எனினும் பெருகி வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் மீண்டும் அவற்றின் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தபடியே இருக்கின்றன.
இந்நிலையில் வரவிருக்கும் தீபாவளி சமயத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் சாதாரண நாட்களை விடவும் 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என ஆம்னி பேருந்து சங்கக் கூட்டமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.