கருணாநிதியின் வாழ்க்கை அரசு பாடத்திட்டத்தில்?

Home > தமிழ் news
By |
கருணாநிதியின் வாழ்க்கை அரசு பாடத்திட்டத்தில்?

திமுக தலைவர் கருணாநிதி 1924ம் ஆண்டு பிறந்து நிகழும் 2018ம் வருடம் மறைந்தார்.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 5 முறை முதல்வராகவும் பங்காற்றிய கருணாநிதி முத்தமிழ் அறிஞர், கலைஞர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியத்திலும், தமிழ் சினிமாக்களிலும் தமிழ் சார்ந்து பங்காற்றிய கலைஞர் கருணாநிதி அண்மையில் சென்னை மெரினா கடற்கரையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், திமுக கோரிக்கை விடுத்தால் அரசின் பாடத்திட்டங்களில் கலைஞர் மு.கருணாநிதியின் வாழ்க்கையை பாடமாக சேர்க்க பரிசீலனை செய்வதாகவும் மு.கருணாநிதியின் இலக்கிய படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதற்கு தமிழக அரசு ஒருபோதும் தடையாக இருக்காது என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார்.

 

முன்னதாக கலைஞர் நினைவிடம் அமைப்பதற்கு மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு நிகழ்ந்த இழுபறியை மீறி, இறுதி நிமிடத்தில் கலைஞரை அடக்கம் செய்யப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MKARUNANIDHI, DMK, KALAINGAR, KALAIGNAR