இனி மெரினா பீச் போறவங்க, பார்க்கிங் கட்டணம் எடுத்து வெச்சுக்கங்க!

Home > தமிழ் news
By |
இனி மெரினா பீச் போறவங்க, பார்க்கிங் கட்டணம் எடுத்து வெச்சுக்கங்க!

சென்னையில் விடுமுறை நாட்கள் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது மெரினா பீச் தான். உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரீனா கடற்கரையில்தான் பலரும் ரிலாக்ஸ் செய்ய வருவர்.

 

'காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்' என்றெல்லாம் பாட்டு பாடியது கூட இந்த கடற்கரை ஓரம் நின்று அந்த சில்லென்று காற்றை ரசித்தவர்கள்தான். இத்தனை கூட்டம் இங்கு மோதுவதற்கு மிக முக்கியமான காரணம் இங்கு செல்வதற்கு எந்தவிதமான கட்டணங்களும் கிடையாது, ஏனென்றால் இது ஒரு பொது ஸ்தாபனம்.

 

ஆனால் இனி அப்படி இருக்க போவதில்லை. ஒரு மணி நேரத்திற்கு காருக்கு ரூபாய் 20 என்றும் பைக்கிற்கு ரூபாய் 5 என்றும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக கட்டணங்களை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை மெரீனா பீச்சிலும், எலியட்ஸ் கடற்கரையிலும் பின்பற்றப்படவுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. 

MARINABEACH, PARKINGCHARGES