130 வருடமாக பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து அசத்தும் கிராமம்!

Home > தமிழ் news
By |
130 வருடமாக பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து அசத்தும் கிராமம்!

அஸ்ஸாமில் 130 வருடங்களாக பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்யும் ஊரும் அந்த ஊர்க்காரர்களும் அவர்களது பட்டாசுகளும் பெருமளவில் பேசப்பட்டு வருகின்றன. 

 

அஸ்ஸாமின் அருகே உள்ள கனாக்குச்சி கிராம மக்கள் 1885-ம் வருடத்தில் இருந்து பட்டாசுகளைத் தயாரித்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் பட்டாசுகள் இயற்கையை மாசுபடுத்தாத, குறைவான சத்தத்தில் வேதிப்பொருள்கள் அற்று, மிகக் குறைந்த வெடிமருந்துகளுடன் வெடிக்கும் பட்டாசு வகைகளாவன.

 

எனினும் இந்த பட்டாசுகள் இரவு நேரங்களில் வர்ண ஜாலங்களாக காட்சியளிக்கவும் செய்கின்றன. இவை சுற்றுச் சூழலைக் கெடுக்காத பசுமை பட்டாசுகள் என்று  அஸ்ஸாம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளதை அடுத்து பெருவாரியான மக்களால் இந்த ஊர் பட்டாசுகள் கண்டுகொள்ளப்பட்டதற்கு முக்கியக் காரணம், இந்த வருடம் வந்த உச்சநீதிமன்றத்தின் 2 மணி நேர கட்டுப்பாடுதான் என்கின்றனர் இந்த ஊர் மக்கள். 

DIWALI, GREENCRACKERS, GREENDIWALI, ENVIRONMENT, ASSAM, INDIA