'பிராண்ட் அம்பாசிடர், ஆலோசகர் தேவையில்லை'.. ஷேவாக்கைக் கைகழுவிய பஞ்சாப் அணி!
Home > தமிழ் newsகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் பதவியிலிருந்து, வீரேந்தர் ஷேவாக் விலகியுள்ளார்.
வீரர், ஆலோசகர் என சுமார் 5 வருடங்கள் பஞ்சாப் அணியில் இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக்குக்கு அணி நிர்வாகம் விடை கொடுத்துள்ளது. இதுகுறித்து ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில்,''அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வரவேண்டியதுதான். கிங்ஸ் லெவன் அணியுடன் நல்ல காலங்களை செலவழித்தேன். 2 சீசன்கள் வீரராக ஆடினேன், 3 சீசன்கள் ஆலோசகராக இருந்தேன். கிங்ஸ் லெவன் அணியுடனான எனது கூட்டுறவு முடிவுக்கு வருகிறது. அனைவருக்கும் நன்றி. அணிக்கும் நன்றி,'' என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ஷேவாக் அளித்த பேட்டியில்,''அணி உரிமையாளரிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது, அதில் பிராண்ட் அம்பாசிடர் மற்றும் ஆலோசகர் தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தது. இதற்கும் பிரீத்தி ஜிந்தாவுக்கும் சம்பந்தமில்லை என்றே கருதுகிறேன். அவர்களின் முடிவுகளுக்கு குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை,'' என தெரிவித்துள்ளார்.
All good things must come to an end and I've had a wonderful time at Kings 11 Punjab, for 2 seasons as a player and 3 as a mentor. My association with Kings 11 comes to an end and I am thankful for the time I have had here and wish the team all the very best for the times ahead.
— Virender Sehwag (@virendersehwag) November 3, 2018