அடங்கப்பா.. ஒரு கொட்டாங்குச்சி இவ்வளவு ரூபாயா? அமேசானின் விலைய பாத்தா அசந்துருவீங்க!

Home > தமிழ் news
By |

தேங்காய் சிரட்டைகளை இந்தியாவில் நாம் மிக சாதாரணமாக தூக்கி குப்பைகளில் எறிவது வழக்கம்.

அடங்கப்பா.. ஒரு கொட்டாங்குச்சி இவ்வளவு ரூபாயா? அமேசானின் விலைய பாத்தா அசந்துருவீங்க!

ஆனால் இனி அவ்வாறு எரிவதற்கு முன்பாக நாம் அமேசானின் ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் தேங்காய் சிரட்டைகளின் விலைகளை ஒருமுறை சோதனை செய்வது நல்லது. 

ஆம், தேங்காய் சில்லுகள்தானே நமக்குத் தேவை. அதனால் தேங்காய் சில்லுகளை துருவி எடுத்துக்கொண்டுவிட்டு, நாம் அந்த தேங்காய் சிரட்டைகளை தூக்கி வீசுகிறோம். பழைய காலத்தில் பாட்டிகள் கொட்டாங்குச்சிகளாக்கி வெற்றிலை உமிழ்வது, விறகெரிக்க பயன்படுத்துவது என இருந்தனர். 

அத்தகைய தேங்காய் சிரட்டைகள்தான் இன்றைக்கு அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் சுமார் 1300லிருந்து 3000 ரூபாய் வரை விற்கத் தொடங்கியுள்ள அதிசயமான-அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதனைப் பார்த்து அதிர்ச்சியான இந்தியர்கள் பலர், 20 ரூபாய்க்கு மொத்த தேங்காயையும், 1300 ரூபாய்க்கு ஒரு மூட்டை தேங்காயையும் வாங்குபவர்கள்தான். அதனால்தான் பலரும், இனி ஈஸியாக அமேசானுக்கு தேங்காய் மூடிகள் (தேங்காய் சிரட்டைகள்) அல்லது கொட்டாங்குச்சியை சப்ளை செய்து பணக்காரர்களாக ஆகிவிடலாம் என்று வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். 

COCONUTSHELLS, AMAZON, VIRAL, INDIA, ONLINEMARKETING, BIZARRE