‘அந்த சம்பவத்துக்கு பிறகு வீட்டவிட்டு வெளியவே வரமாட்டேங்கிறார்’.. கிரிக்கெட் வீரரின் தந்தை உருக்கம்!

Home > தமிழ் news
By |

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவும், கே.எல்.ராகுலும்  கரண் ஜோகர் நடத்திய ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில்  இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாலும் அண்மையில் ‘ஷோ  காஸ் நோட்டீஸ்’ கொடுக்கப்பட்டும் , இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கண்டிக்கப்பட்டும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

‘அந்த சம்பவத்துக்கு பிறகு வீட்டவிட்டு வெளியவே வரமாட்டேங்கிறார்’.. கிரிக்கெட் வீரரின் தந்தை உருக்கம்!

இந்நிலையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்ப பிசிசிஐ அதிரடியாக உத்தரவும் இட்டது. ஆனால் அவர் வீட்டுக்கு வந்த பிறகு வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை என்று ஹர்திக் பாண்ட்யாவின் தந்தை கூறியுள்ள தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளன.

ஹர்திக் பாண்ட்யாவின் தந்தை ஹிமான்ஷி இதுபற்றி கூறுகையில், பொதுவாகவே ஹர்திக் பாண்ட்யா வீட்டிற்கு வந்தால் நன்றாகவும் மகிழ்ச்சியுடனும் ஊர் சுற்றுபவர் என்றும், அவரைப் போன்றதொரு ஃபிளை கைட்ஸினை பார்ப்பதே அரிது என்றும் கூறினார். 

மேலும் பேசிய ஹிமான்ஷி, ‘அந்த டிவி நிகழ்ச்சியில் பேட்டி அளித்த பிறகு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஹர்திக் பாண்ட்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தால் பல விமர்சனங்களும் செய்திகளும் சமூக வலைதளங்கள் வலம்வந்தபடி இருக்கின்றன. எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டிகளை ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். யாரிடமும் பேசுவதில்லை;வீட்டை விட்டு வெளியவே வருவதில்லை, அவருக்கு போன் கால்களை கூட அவர் பெரும்பாலும் அட்டென் செய்யவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

HARDIKPANDYA, CRICKET, AUSVIND, BCCI, COFFEEWITHKARAN, HIMANSHI, FATHER