இந்தியாவில் இருந்து ஐபிஎல் ஏலத்தில் 17 வயது பையன்.. மெர்சல் ஆன கிரிக்கெட் ரசிகர்கள்!
Home > தமிழ் newsஐபிஎல் ஏலத்தில் 17 வயதேயான இளம் வீரர் ஒருவர் சர்வதேச ஏலத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, அந்த வீரரும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.
2019-ஆம் ஆண்டு நிகழவிருக்கும் 12வது ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள, இறுதி வீரர்களின் பட்டியலை முடிவுசெய்வதற்கான ஏலம் டிசம்பர் 18-ல் நடக்கிறது. மொத்தம் 1003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 226 இந்திய வீரர்கள் உட்பட 346 வீரர்கள் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்து இந்த வீரர்களில் இருந்து 70 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அணிகளுக்கு ஒதுக்கப்படுவார்கள்.
பலதரப்பட்ட வீரர்களின் சம்பளத் தொகைகள் முந்தைய போட்டித் தொடர்களுக்கும் வரும் போட்டித் தொடருக்கும் ஒப்பிட்டால், ஏறவும் இறங்கவும் செய்துள்ளன. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இருந்து மட்டுமே நான்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் முக்கியமாக ராஷிக் சலாம் எனும் வீரர், தனது ஆரம்ப விலையாக 20 லட்சத்தை நிர்ணயித்துள்ளதோடு மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் விளையாடுவதற்கு தேர்வாகியிருக்கும் 17 வயதே ஆன துடிப்புமிக்க இளம் வீரர் என்று புகழப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
முன்னதாக ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட அணிகளுடன் ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதிய தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பிடத்தக்க அளவு கவன ஈர்ப்பை பெற்றவர் ராஷிக் சலாம் என்பது குறிப்பிடத்தக்கது.