அடுத்து வரும் ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடர்களுக்கு இவங்கதான் கேப்டன்’ஸ்!

Home > தமிழ் news
By |
அடுத்து வரும் ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடர்களுக்கு இவங்கதான் கேப்டன்’ஸ்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை ஈட்டுத்தந்தவர் கேரி கிரிஸ்டன். ஆனால்வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரூ அணிக்கு பயிற்சி கொடுக்கும் அவர், முழுமையாக அந்த அணியின் வெற்றியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால், உலகக் கோப்பை டி20 போட்டிகளின் அரையிறுதில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தோல்வியடைந்தது.

 


அதன்பின் இந்திய பெண்கள் அணியினர் ஆடும் முதல் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கபில்தேவ், அன்சுமன் கெய்க்வார்ட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு நடத்திய தேர்வை அடுத்து, பிசிசிஐ WV ராமனை புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது. 

 

WV ராமன் (53 வயது),  11 டெஸ்ட் மற்றும் 27 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர். 1997-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுடன் தனது கடைசி சர்வதேச போட்டியை ஆடினார். முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 1992-ல் விளையாண்டபோது சர்வதேச சதம் ஒன்றையும் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், ரஞ்சி போட்டிகளில் தமிழ்நாடு, பெங்கால் அணிகளுக்கு பயிற்சியாளராகவும் இருந்தவர். தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் அடுத்து, நியூஸிலாந்துக்கு எதிராக  ஜனவரி 24ம்தேதி தொடங்கவிருக்கும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டத்துக்கும், பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கவிருக்கும் டி20 தொடர் போட்டிக்குமான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் அணிக்கு மிதாலிராஜும், டி20 அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுரும் கேப்டனாக தொடருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BCCI, WOMENS, CRICKET, TEAMINDIA, NEW ZEALAND, CAPTAINS