‘கருத்தால் ஒன்றுபட்டவர்கள்’..தமிழ்நாடு பெண்களும் பம்பையில்.. திக்திக் நொடிகள்!
Home > தமிழ் newsசபரிமலை கோவிலுக்குள் செல்லவேண்டி தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் பம்பை அடிவார முகாமுக்கு வந்துள்ளனர். சந்நிதானத்துக்கும் பம்பை அடிவாரத்துக்கும் இடையே 4 கி.மீ தூரமே உள்ள நிலையில் இப்பெண்கள், பலத்த போலீசார் பாதுகாப்புடன் செல்லவிருப்பதாக தகவல்கள் வந்தவுடன்,இதற்கான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
எனினும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநில பெண்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து முடிவாக சபரிமலை தரிசனத்தை காண்பதில் உறுதியாய் உள்ளதால், அவர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதலில் 11 பெண்களை உள்ளே கொண்டுசெல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த செப்டம்பர் மாதம், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. ஆனால் மாதவிடாய் வயதுக்குரிய பெண்களைத் தவிர்த்து சிறுமிகள் மற்றும் வயதானவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று எதிர்ப்புக்காரர்கள் வாதம் செய்தனர்.
இதேபோல், பத்திரிகை நிரூபர்கள் உட்பட இரண்டு பெண்கள் சபரிமலையை அடைய முற்பட்டபோது சென்றமுறை கலவரம் வெடித்தது. இந்நிலையில், தற்போது சென்றுள்ள இந்த பெண்கள் குழுவில் சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி என்பவரும் இருக்கிறார். அவர், தாங்கள் நிஜமாகவே ஐயப்பன் பக்தர்கள் என்றும், சபரிமலை கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வதற்கான முறையான விரதங்களை இருந்து வந்துள்ளதாகவும், தலித் மக்கள் உட்பட பலர் உள்ள தங்கள் குழு நிச்சயம் தரிசனம் கண்டுவிட்டுதான் செல்லும் என்று கூறினார். மேலும் தாங்கள் அனைவரும் வேறு மாநிலத்தையும் மொழியையும் சேர்ந்தவர்களாக இருப்பினும், கருத்தால் ஒன்றுபட்டவர்கள் என்றும் கூறினார்.
எனினும் போராட்டக்காரர்கள் கல்வீசியதை அடுத்து, இந்த பெண்கள் பாதுகாப்பு கருதி, பம்பை காவல் நிலையல் அழைத்துச் செல்லப்பட்டதோடு, கல் வீசியவர்கள் கைது செய்யப்பட்டனர்.