காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு, கணவர் தப்பி ஓட்டம்!

Home > தமிழ் news
By |
காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு, கணவர் தப்பி ஓட்டம்!

ராமநாதபுரத்தில் அழகன்குளம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மீனவர் முனியசாமி 10 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடித் தொழில் செய்ய துபாய் சென்றபோது அங்கு ஷேக் ஒருவரின் வீட்டில் வேலை பார்த்துவந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

 

பின்னர் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து குழந்தை வளர்ந்த நிலையில் புதுக்குடியிருப்பில் உள்ள தன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு முனியசாமி மீண்டும் தன்  மனைவயுடன் துபாய் சென்றுள்ளார். அங்கு இருவரும் பணிபுரிந்துவிட்டு கடந்த 2 வருடங்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளனர்.

 

இதற்கிடையே புதுக்குடியிருப்பில் வாழ்ந்துவந்த இந்த தம்பதியர்க்கிடையே அடிக்கடி ஏற்பட்ட சண்டை சச்சரவுகளால் காவல் நிலையம்வரை சென்று போலீசாரின் அறிவுரையின் வாழ்ந்து வந்துள்ளனர்.

 

இந்தநிலையில் தற்போது மும்தாஜூடன் ஏற்பட்ட தகராறில் முனியசாமி, அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்க, மும்தாஜ் ரத்தத்துடன் பரிதாபமாக  இருந்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த  தேவிபட்டினம் போலீஸார், பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய முனியசாமியை தேடி வருகின்றனர்.

MURDER, CRIME, TAMILNADU, DUBAI