திடீரென போராட்டத்தில் குதித்த ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்...ஸ்தம்பிக்குமா உணவு டெலிவரி!

Home > தமிழ் news
By |
திடீரென போராட்டத்தில் குதித்த ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்...ஸ்தம்பிக்குமா உணவு டெலிவரி!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் உணவு டெலிவரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடும் காலம் போய்,இப்போது வீட்டிற்கே உணவை வரவழைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த பணியில் முன்னணியில் இருப்பது ஸ்விக்கி.இந்தியாவில் 45,000 உணவகங்களுடன் இணைந்து மொத்தம் 45 நகரங்களில் செயல்படும் ஸ்விக்கியில், தற்போது டெலிவரி செய்யும் வேலையில் மட்டும் ஒரு லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

 

வேலைக்கு செல்பவர்கள் முதற்கொண்டு தனியாக தங்கியிருக்கும் அனைவருக்கும்,நினைத்த நேரத்தில் உணவை வரவழைத்து சாப்பிடுவதற்கு ஸ்விக்கி மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.இந்நிலையில் சம்பள உயர்வு உள்ளிட்ட சில முக்கிய கோரிகைகளை வலியுறுத்தி, சென்னையில் கடந்த இரண்டு நாள்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் உணவு டெலிவரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

SWIGGY, STRIKE