நேரலையில் செய்தி வாசிப்பாளர் மீது பாய்ந்த நெருப்பு பந்து..வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |
நேரலையில் செய்தி வாசிப்பாளர் மீது பாய்ந்த நெருப்பு பந்து..வைரல் வீடியோ!

பாகிஸ்தானில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் மீது நேரலையில் நெருப்பு பந்து வீசப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நேரலையில் நெறியாளராகவும் செயல்படும் அந்த செய்தி வாசிப்பாளர் சிலரிடம் கேள்விகள் கேட்கிறார்.

 

அப்போது வெடிச் சத்தம் ஒன்று அரங்கில் கேட்கிறது. அந்த சத்தம் கேட்டதுமே செய்தி வாசிப்பாளர் தன் தோள்களை மெல்லமாகக் குலுக்கி ஜர்க் கொடுக்கிறார். இதனை அடுத்து கேமராவில், யாரோ ஒருவரின் பிம்பம் குறுக்கே செல்கிறது. அதன் பின்னும் வாசித்துக்கொண்டிருக்கும் செய்தி வாசிப்பாளர் மீது சில நொடிகளிலேயே நெருப்பு பந்து ஒன்று வீசப்படுகிறது. உடனே அந்த நெருப்பு பந்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக எழுந்து தட்டிவிட்டபடி கேமராவின் ஃபிரேமில் இருந்து வெளியில் செல்கிறார் செய்தி வாசிப்பாளர். 

 

எனினும் செய்தி வாசிப்பாளரால் கேள்வி கேட்கப்படும் நபர் எதுவும் நடக்காதது போல் அமைதியாக அமர்ந்திருப்பதையும், தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்டு இருக்கும் இன்னொரு நபர், தான் சொல்ல வந்ததை சொல்லிக்கொண்டிருப்பதையும் காண முடிகிறது. இந்த வீடியோவில் நடந்தது என்ன என்கிற குழப்பத்தினாலேயே வீடியோ மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. 

 

NEWSANCHOR, VIRAL, VIDEOCLIP, WATCH, PAKISTAN, LIVE, TELECAST, FIREBALL