இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நிகழும் அதிரடி மாற்றங்கள்!

Home > தமிழ் news
By |
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நிகழும் அதிரடி மாற்றங்கள்!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க, புதிய நிர்வாக கமிட்டியை வினோத் ராய் தலைமையில் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் முக்கியமான அதிகாரங்ளை வினோத் ராய் தலைமையிலான இந்தக் கமிட்டி  முழுமையாக தம்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

 

இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா, செயலாளர் அமிதாப் சவுத்ரி, பொருளாளர் அனிருத் சவுத்ரி என அனைவருமே வினோத் ராய் தலைமையிலான கமிட்டியின் ஆலோசனைப்படி இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

மேலும் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் வரை,  தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி தலைமையிலான குழு பணிகளை கவனித்துக்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

CRICKET, INDIA, BCCI