175 டன் நிவாரணப் பொருட்களுடன், கேரளா செல்லும் எமிரேட்ஸின் 12 கார்கோ விமானங்கள்!
Home > தமிழ் newsகேரளாவில் தேசிய பேரிடர் காரணமாக கனமழை, வெள்ளத்துக்கு பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,வெவ்வேறு மாநிலங்களும் தனியார் தொண்டு அமைப்புகளும், தேசிய ராணுவ மீட்புப் படையினரும் உதவி செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 12 கார்க்கோ விமானங்கள் கேரளாவுக்கு வருகின்றன. இதில்ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு, உலகம் முழுவதும் இருந்து தொழில் முனைவோர்களும், தன்னார்வலர்களும் நன்கொடையாக அளித்த சுமார் 175 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள் கேரள மக்களுக்கு வழங்கப்படுகின்றனர்.
மேலும் அரசின் எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ விமானம் மூலம் கேரளாவுக்கு அனுப்பப்பப்படும் இந்த நிவாரண பொருட்களை 12 கார்க்கோ விமானங்களை பயன்படுத்தி எடுத்துச் செல்லப்படவுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
KERALA, KERALAFLOOD, AIRLINESEMIRATES, FLOODRELIEF